ஏப்ரல் 27 முதல் இந்தியாவிற்கு வருகிறது ஆப்பிளின் New iPad விலை பட்டியல் உள்ளே

கணினிகளை கையடக்கத்தில் கொண்டுவந்த பெருமை ஆப்பிளையே சாரும். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் New iPad என்ற புதிய வகை டேப்லெட் கணினிகளை வெளிட்டது. இந்த புதிய டேப்லெட் கணினிகளை வெளியிட்ட நாடுகளில் எல்லாம் போட்டி போட்டு வாங்கினார்கள். வெளியிட்ட மூன்றே நாட்களில் முப்பது லட்சம் கணினிகளை விற்று தீர்ந்தன. இப்பொழுது இந்த புதிய வகை கணினிகளை ஏப்ரல் 27 முதல் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து உள்ளது.

இப்பொழுது New iPad கணினிகள் 35 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்க்கு அடுத்த கட்டமாக ஏப்ரல் 20 ஆம் தேதி 12 நாடுகளில் தென்கொரியா, புரூணை, குரோஷியா, சைப்ரஸ், டொமினிக்கன் குடியரசு, மலேசியா, செயின்ட் மார்டின், பனாமா, உருகுவே, வெனிசுலா, குவாத்தமாலா மற்றும் எல் சால்வடோர் போன்ற நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. 
அதற்கடுத்த கட்டமாக ஏப்ரல் 27 ஆம் தேதி ஒன்பது நாடுகளிலும் வெளியிட உள்ளனர். அவை கொலம்பியா, எஸ்டோனியா, இந்தியா, இஸ்ரேல், லாட்வியா, லிதுவேனியா, மாண்டினீக்ரோ, தென் ஆப்ரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகும்.

சிறப்பம்சங்கள்: 

  • New Retina Display
  • Height: 9.50" Width: 7.31" Depth: 0.37" Weight: 1.44 pounds (652 g) 
  • 16GB , 32GB , 64GB depend upon your investment 
  • Display 2048-by-1536-pixel resolution at 264 pixels per inch 
  • 5-megapixel iSight camera Wi-Fi (802.11a/b/g/n) 
  • It has 42.5-watt-hour rechargeable lithium-polymer battery. You can Up to 10 hours of surfing the web on Wi-Fi, watching video, or listening to music.

விலைப்பட்டியல்:

  • Wi-Fi : 16GB -  Rs.30,500 , 32GB - Rs.36,500 , 64GB - Rs. 42,500.   
  • Wi-Fi + 4G : 16GB -  Rs.38,900 , 32GB - Rs. 44,900 , 64GB - Rs. 50,900.
ஆப்பிளின் New iPad கணினிகளை வரும் 27 ஆம் தேதி முதல் www.apple.com என்ற முகவரியில் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now