
சந்தேக நபரிடம் இந்தக் கொலை தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
இங்கிலாந்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி தனது தாயுடன் இலங்கை
வந்துள்ள 48 வயதுடைய கனகசபை சுதர்ஷினி சஹீலா என்ற மேற்படி பெண் கைது
செய்யப்பட்ட சந்தேக நபரை பெப்ரவரி மாதம் 10ம் திகதி திருமணம்
முடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும்
மூன்று மூன்று மாதங்கள் வாழ்ந்து வந்துள்ள சந்தேக நபர் ஏற்கனவே திருமணம்
செய்துள்ளதுடன் அவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
இந்தியாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில்
மனைவியும் பிள்ளைகளும் இறந்துவிட்டதாக தற்போது கூறியுள்ள இவர், தான்
திருமணம் முடிக்காதவர் என்று கூறியே கொலை செய்யப்பட்ட பெண்ணை திருமணம்
முடித்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்மணியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவராவார்.
இந்நிலையில், இரண்டாவது தாரமாக கடந்த
பெப்ரவரி 10ம் திகதி திருமணம் முடித்த இருவரும் குறித்த நட்சத்திர
ஹோட்டலின் முதலாம் மாடியிலுள்ள முதலாவது அறையில் கடந்த 23ம் திகதி முதல்
தங்கி வந்துள்ளனர்.
கடந்த 23ம் திகதி முதல் 28ம் திகதி வரையான
ஐந்து நாட்கள் இவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல்
பூட்டியிருந்ததை அவதானித்த ஹோட்டல் நிர்வாகத்தினர் சந்தேகம் எழுந்ததை
அடுத்து தங்களிட முள்ள சாவியினால் அறையை திறந் துள்ளனர்.
இதன்போதே அந்த அறைக்குள் தங்கியிருந்த
சஹீலா என்ற பெண் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக
கிடந்துள்ளமையை அவதானித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸில்
முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்ட
பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்
தெரிவித்தார்.
