அனைத்து புவி சிறுதட்டுக்களிலும் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக 24
மணித்தியாலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் 30 நில அதிர்வுச்
சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி
நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வுச் சம்பவங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என்று மேற்படி புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
4 முதல் 6 ரிச்டர் அளவுகளுக்குள் பதிவாகியுள்ள மேற்படி நில அதிர்வுச் சம்பவங்களில் 15 சம்பவங்கள் சுமாத்ராவுக்கு அருகிலான கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வட இந்தியாவில் 4.3 ரிச்டர் அளவிலும், சீனாவில் 4.5 ரிச்டர் அளவிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், ஜப்பான் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 4 நில அதிர்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.