பழவகைகள் இறக்குமதிக்கு தடை

news
ஐந்து வகையான பழவகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக  விவசாய அமைச்சின் செயலாளர் விஜயரத்ன சகலசூரிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தற்போது இறக்குமதி செய்யப்படும் பழவகைகள் எதிர்காலத்தில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதற்கான தீர்மானத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதனடிப்படையில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, திராட்சை மற்றும் மாதுளை ஆகிய பழவகைகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இந்தப் பழவகைகளில் பப்பாளி, அன்னாசி, மாம்பழம் ஆகியன தற்போது உள்நாட்டில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

திராட்சை மற்றும் மாதுளையின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதித் தடை விதிப்பதன் ஊடாக குறித்த பழ வகைகளுக்கான உற்பத்தியை தேசிய ரீதியில் அதிகரிக்க முடியுமெனவும், அந்நிய செலாவணியை குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now