புற்றுநோய்க்கான
சிகிச்சையைப் பெற்றுவரும் இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங்
எதிர்வரும் 9ஆம் திகதி இந்தியாவிற்குத் திரும்பவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் பொஸ்டனில் புற்றுநோய்க்கான
சிகிச்சையைப் பெற்றுவந்த யுவ்ராஜ் சிங் அந்த சிகிச்சை நிறைவடைந்துள்ளதை
அடுத்தே நாடு திரும்பவுள்ளார்.
பொஸ்டனில் சிகிச்சையை முடித்துக்கொண்ட யுவ்ராஜ் சிங், தற்போது லண்டனில் தங்கியுள்ளார். அங்கு வைத்து சிகிச்சைகளுக்காக அங்கு வந்திருந்த சச்சின் டெண்டுல்கரையும் அவர் சந்தித்திருந்தார். இந்நிலையிலேயே அவர் எதிர்வரும் 9ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை முடித்துக்கொண்ட யுவ்ராஜ் சிங் கடந்த மாதம் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் வேகமான முறையில் தொடர்ந்தும் குணமாகி வருகிறார்.
யுவ்ராஜ் சிங் நாட்டுக்குத் திரும்பியதன் பின்னர் அவரது எதிர்காலத் திட்டங்கள், அவரது சிகிச்சை சம்பந்தமான விடயங்கள் தொடர்பான அறிவிப்புகளை விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புற்றுநோய் உண்டெனக் கண்டறியப்பட்டதன் பின்னர் அவர் இதுவரை ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக கருதுக்களை வழங்கியிருக்கவில்லை. ஆனால் அவருடைய டுவிற்றர் பக்கத்தில் அவர் தொடர்ந்தும் தனது உடல்நிலை தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வந்ததுடன், தனக்கான பிரார்த்தனைகளுக்கு நன்றி செலுத்தி வந்தார்.