டில்ஷானுக்கு அபராதம்

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது அளவுக்கதிகமாக அப்பீல் செய்த குற்றத்திற்காக இலங்கை அணியின் சகலதுறை வீரரான திலகரட்ன டில்ஷானுக்கு அவரின் போட்டிக்கான ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ரொட் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது அவர் ஆட்டமிழந்ததாக எண்ணி அவரை நோக்கி குதூகலத்துடன் ஓடிச் சென்றார் தில்ஷான். அப்போது ட்ரொட்டின் துடுப்பில் பந்துபடவில்லை. ட்ரொட்டிற்கு எதிரான அப்பீல் நடுவரானில் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. ஒழுக்கக் கோவையின் 2.1.5 ஆவது பிரிவை மீறிய குற்றச்சாட்டை டில்ஷான் ஒப்புக்கொண்டார்.

போட்டி மத்தியஸ்தரான ஜவகல் ஸ்ரீநாத் இது தொடர்பாக கூறுகையில், "டில்ஷான் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். தயக்கம் எதுவுமின்றி அபராதம் விதிக்கப்பட்டது. எனவே முறைப்படியான விசாரணைக்கு அவசியமிருக்கவில்லை" என்றார்.

கொழும்பு பி.சாரா ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் 3 ஆவது நாளான இன்றைய ஆட்டமுடிவின்போது இலங்கை அணி  தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மஹேல ஜயவர்தன 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். திலான் சமரவீர 47 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் கிறேம் ஸ்வான் 82 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 275 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 460 ஓட்டங்களையும் பெற்றன. தற்போது இலங்கை அணி 33  ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now