இதற்கு முன்னர் பொலிஸ் நிலையங்கள் பகல் வேளைகளிலேயே சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இரவு வேளைகளில் பொலிஸ் நிலையங்களை சோதனையிடுவதன் மூலம் அங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பலவற்றை உறுதி செய்து கொள்ள முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் முதற்கட்டம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரது ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுறகிறார்.
அத்துடன் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகளவில் இரவு வேளைகளிலேயே இடம்பெறுவதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.