தனிப்பட்ட விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் அதிபர்
சர்தாரி இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து
பேசினார். இச்சந்திப்பின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து
தெரிவிக்கையில்,
இப்பேச்சுக்களில் இருநாட்டு விவகாரங்கள் தொடர்பில் கருத்தொற்றுமை
இருந்தது. பாகிஸ்தானுக்கு வருமாறு சர்தாரி விடுத்த அழைப்பை
ஏற்றுக்கொண்டேன். அது போன்று இவ்வருட இறுதியில் சர்தாரியை இந்தியாவுக்கு
வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என்றார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி
கருத்து தெரிவிக்கையில் இச்சந்திப்பு தமக்கு இனிமையானதாகவும்,
திருப்திகரமானதாகவும் இருந்ததாகவும் இரு நாடுகளுமே நல்லுறவுகளை வளர்க்க
விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ராஜஸ்தானில், அஜ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் தர்காவில் வழிபாடு செய்யும் நோக்கிலேயே சர்தாரியின் விஜயம் அமைந்திருந்த போதும், பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தார்.

குண்டுவெடிப்பு மூலம் கொல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
பெனாசீர் பூட்டோவின் கணவரான சர்தாரி 7 வருடங்களுக்கு முன்னர் தனது
மனைவியுடன் ஆஜ்மீர் தர்ஹாவிற்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மன்மோகன் சிங் அளித்த மதிய விருந்துபசாரத்திலும் சர்தாரி கலந்து கொண்டதுடன் அவருடைய மகனும் பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரிவும் பிரதமரின் விருந்துபச்சாரத்தில் கலந்து கொண்டார். மேலும் அவர் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடினார்.
மேலும் இவ்விருந்து உபராசத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எனினும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா கலந்துகொள்ளவில்லை.உலகிலேயே 19 வயதில் கட்சி தலைவர் பொறுப்பு வகித்த முதல் இளம் தலைவர் எனும் பெருமையும் பிலாவலுக்கு உண்டு. அவர் தொடர்ந்து 5 ஆண்டுகளாக கட்சி தலைவர் பொறுப்பை திறம்பட கவனித்து வருகிறார்.