இது தொடர்பாக சவூதி அரேபிய மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார கூறியுள்ளார்.
தற்போது குவைத்தில் பணியாற்றும் இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு மாதாந்த சம்பளமாக 60 தொடக்கம் 65 குவைத் டினார்கள் கிடைக்கின்றன. இதனை 85 குவைத் டினாராக உயர்த்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இறுதி இணக்கப்பாட்டினை எட்டும் வகையில் அடுத்த மாதம் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுடன் ஜோர்தானில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பளத்தை அதிகரிக்கும்போது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷிய வீட்டுப் பணிப்பெண்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.