யாழ். நகரிலுள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று
வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ
வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.
இந்த இரு இராணுவ வீரர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு
இராணுவ வீரர் மீது மற்றுமொரு இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு
மேற்கொண்டுள்ளார்.
|
இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ வீரர் தன்னைத்தானே
சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினையே இதற்கான
காரணமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
சுமித், எதிரிசிங்க என்ற இராணுவ வீரர்களே துப்பாக்கிச் சூட்டில்
பலியானவர்கள் ஆவர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் இராணுவத்தினரும்
விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். |
யாழில் இராணுவ வீரர்களிடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் பலி! (படங்கள்)
Labels:
குற்றவியல்