ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ஒரு சீசனில் அதிக கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் மெஸ்சி.
அர்ஜென்டினா
அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, 24. பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி
வருகிறார். ஸ்பானிஸ் லா லிகா, சாம்பியன்ஸ் லீக் என, பல்வேறு தொடர்களில்
இந்த அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனிடையே,
ஸ்பானிஸ் லா லிகா தொடரில், மலாகா அணிக்கு எதிரான லீக் போட்டியில்,
"ஹாட்ரிக்' கோல் அடிக்க, ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் 68வது கோல் அடித்த
முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், பேயர்ன் முனிக் அணியின்
ஜெர்டு முல்லர் (ஜெர்மனி), 1972-73 சீசனில் 67 கோல் அடித்திருந்தார்.