லகம் முழுவதும் சுமார் 380 மில்லியன் பேஸ்புக் பயனாளிகள் பேஸ்புக் க்ரூப்
வசதியை உபயோகித்து வருகின்றனர். இப்பொழுது பேஸ்புக் க்ரூப்பில் Upload File
என்ற ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது பேஸ்புக் நிறுவனம். இந்த
வசதியின் மூலம் உங்களிடம் உள்ள பைல்களை மற்ற தளங்களின் உதவி இல்லாமல்
நேரடியாக அப்லோட் செய்து பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக உங்களிடம் ஒரு
பிடிஎப் பைல் இருக்கிறது என வைத்து கொள்வோம் இதற்க்கு முன்னர் மற்ற
தளங்களில் அப்லோட் செய்து அந்த லிங்கை தான் பேஸ்புக்கில் பகிர முடியும்.
இனி அப்படி செய்ய தேவையில்லை நேரடியாக பேஸ்புக்கிலேயே பகிர்ந்து கொள்ளலாம்.
25MB வரை அளவுடைய பைல்களை இதில் அப்லோட் செய்ய முடியும். மற்றும் இதில் ஆடியோ மற்றும் exe பைல்களை தவிர்த்து பெரும்பாலான வகை பைல்களை இதில் அப்லோட் செய்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். உங்கள் நண்பர்கள் அந்த பைல்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளதால் இனி பைல்களை பகிர்ந்து கொள்ள ஈமெயில் மற்றும் ஆன்லைன் சேமிப்பு வசதிகளை பெரும்பாலும் பயன்படுத்த தேவையில்லை. இந்த வசதி கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஆகவே உங்களுக்கு இந்த வசதி இல்லையில் சில நாட்கள் காத்திருக்கவும்.