பிளாக்கரில் Custom URL வசதி தற்பொழுது அனைவருக்கும்

பிளாக்கரில் சில நாட்களுக்கு முன்னர் Permalink என்ற Custom URL வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் நாம் வெளியிடும் பதிவின் URL எப்படி இருக்க வேண்டுமென்று நாமே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் தேடியந்திரங்கள் உங்கள் பதிவுகளை சுலபமாக கண்டறிந்து வாசகர்களுக்கு தெரிவிக்கும். இந்த வசதி முக்கியமாக பிற மொழி பதிவர்களுக்கு (தமிழ் உட்பட) பயனுள்ளதாக இருக்கும்.


இந்த வசதியை சோதனை முயற்சியாக Draft பயனாளிகளுக்கு மட்டுமே அளித்து வந்தனர். இன்றிலிருந்து பிளாக்கர் பயனர்கள் அனைவருக்கும் Permalink வெளியிடப்பட்டுள்ளது. 

எப்பொழுதும் போல பதிவு எழுத New Post பகுதிக்கு சென்று வலது ஓரத்தில் மவுஸ் கர்சரை நகர்த்தினால் Post Settings பகுதி வரும் அதில் Permalink என்ற புதிய வசதி வந்திருப்பதை காணலாம்.

அந்த Permalink என்பதை கிளிக் செய்து அதில் உள்ள Custom URL என்பதை தேர்வு செய்யவும். அதில் உங்களுக்கு வேண்டிய URL டைப் செய்து கொள்ளுங்கள். 
சரியான URL டைப் செய்தவுடன் கீழே உள்ள Done என்பதை கிளிக் செய்தால் போதும் இனி நீங்கள் தமிழில் தலைப்பை வைத்து பதிவு வெளியிட்டாலும் இந்த URL தான் வரும். 
முக்கியமான விஷயம் இந்த வசதியை பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் தேர்வு செய்யும். பப்ளிஷ் செய்து விட்டால் மறுபடியும் URLஐ மாற்ற முடியாது. மற்றும் இந்த வசதி புதிய பிளாக்கர் தோற்றத்தை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. பழைய தோற்றத்தை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை பெற முடியாது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now