கடந்த
வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில்
தமிழீழ விடுதலைப் புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படிச் சம்பவத்தில்
உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியானதையடுத்து ஒரு தமிழ்க் கைதியும்
மூன்று முஸ்லிம் கைதிகளும் உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.
இதில் பண்டாரவளையைச் சேர்ந்த ராமநாதன் பாலபெருமாள் என்ற தமிழ்க்கைதி ஆவார்.
இச்சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த 27பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 உடலங்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறை அதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனை முடிவுற்ற இரண்டொரு நிமிடங்களில் கலவரத்தை தூண்டி விட்டவர்களைக் கண்டறியும் நடவடிக்கை தீவிரமாக நடைபெறுகின்றது.
இதற்காக விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.
சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது அவ்விடத்துக்கு முச்சக்கர வண்டிகளும் வான்களும் எவ்வாறு வந்தன என்பதையிட்டும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களுள் எழுவர் மீண்டும் பொலிஸில் சரண்டைந்ததாகவும், ஏனையோரை தேடும் படலம் தீவிரப்படுத்தப்பட்டு பொரளை, தெமட்டகொட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை சுவரில் துவாரமிட்டு அதனூடாக தப்பி போனதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதுவே ஆயுத மோதலுக்கு வழி வகுத்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்றவர்கள் கடுமையான குற்றங்களை செய்து, பாரிய தண்டனை வழங்கப்பட்டவர்களே அநேகமானோர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் 82 ரைபிள் ரக துப்பாக்கிகள், அரை தன்னியக்க துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.