பல
ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக காட்சியளிக்கும் சூரிய கிரகணத்தை
பார்ப்பதற்காக, சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவில் குவிந்து
வருகின்றனர்.மிகவும் அபூர்வமாகக் காணப்படும் சூரிய கிரகணம், நாளை அதிகாலை,
ஆஸ்திரேலியாவில் தோற்றமளிக்கிறது.
இதை காண்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள, வானியல் நிபுணர்களும், சுற்றுலா
பயணிகளும், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் தெற்கு
பகுதியில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் தோன்றுகிறது.
ஆஸ்திரேலியாவின்
வடக்கு பகுதியில், இந்த கிரகணம் முழு அளவில் காட்சியளிக்கும்.
நியூசிலாந்து, இந்தோனேசியா, சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் ஓரளவுக்கு
இந்த கிரகணம் தெரியும்.