இலங்கை செய்தி: 114 ஆபாச வீடியோகளை தமது செல்லில் வைத்திருந்த நபர் அலவத்துகொடையில் கைது!

பாடசாலை மாணவ மாணவிகளின் சீருடையுடன் நபர்கள் தோன்றும் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோப் படங்கள் உட்பட உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தயாரிக்கப்பட்ட 114 ஆபாச வீடியோ படங்களை தமது செல்லிட தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி  நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அலவத்துகொடை நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த கண்டி நில்லம்ப பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடம் இருந்த ஆபாச படங்களில் பாடசாலை மாணவ மாணவிகளின் சீருடையுடன் நபர்கள் தோன்றும் காட்சிகளும் பிக்கு வேடத்தில் ஒருவர் தோன்றும் காட்சியும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கண்டி நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தலைமையிலான அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now