ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள உபாலி தர்மதாஸ, தீய ஆவிகளை விரட்டுவதற்காக விசேட பூஜையொன்றை ஏற்பாடுசெய்துள்ளார்.
இலங்கை அணி கடந்த வருடம் ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றிருந்தது. வீரர்களுக்கு ஏப்ரல் முதல் டிசெம்பர் வரை சம்பளம் வழங்கப்படவும் முடியாத நெருக்கடியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்நோக்கியது. இவ்வாறான பின்னணியிலேயே இப்பூஜையை அவர் நடத்த அவர் ஏற்பாடு செய்தார்.
'நான் ஒரு வர்த்தகர். இத்தகைய தீய ஆவிகளின் தாக்கம் எனக்கு நன்றாகத் தெரியும்' என எக்ஸ்பிரஸ் ட்ரிபியூனிடம் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிதி நெருக்கடி குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இது வெறும் பணச்சுழற்சி பிரச்சினைதான் என்றார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 7 மில்லியன் ரூபா கடனில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. எனினும் ஜூலை மாதம் இந்திய அணியுடனான போட்டிகளை நடத்தும்போது 15 மில்லியன் டொலர் கிடைக்கும் என உபாலி தர்மதாஸ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேவை வழங்குநர்கள் அனைவருக்கும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் காலக்கிரமத்தில் வழங்கப்படும் என தான் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்