பாகிஸ்தானில்
இதய நோயாளிகளுக்கு அரசே இலவச மாத்திரைகளை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 6
லட்சம் பேருக்கு இலவச மாத்திரைகள் வழங்குகின்றனர். இவ்வாறு லாகூர்
பகுதியிலும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட மாத்திரைகள் தரம் குறைந்ததாக இருந்துள்ளன. இதை சாப்பிட்ட 70 பேர் உயிரிழந்து இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பாதிப்படைந்த 419 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கபட்டு உள்ளனர். அவர்களில் 45 பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த மாத்திரைகளை சாப்பிட்டதும் காய்ச்சல் ஏற்பட்டது.
டெங்கு காய்ச்சலாக இருக்கும் என்று முதலில் கருதினார்கள். ஆனால் மாத்திரையால்தான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து மாத்திரை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே கொடுத்த மாத்திரைகளையும் சாப்பிட வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் உள்ளூர் மருந்து நிறுவனம் ஒன்று இந்த மாத்திரையை தயாரித்து வழங்கி உள்ளது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.