சிங்களவர்
ஆரியர்களின் வழித்தோன்றல் இல்லை என்றும் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு
பிடிக்க முன்னர் இலங்கையில் விமானம் பறந்தது என்ற இரண்டு அதிரடிகளை
விட்டுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க . வரலாற்று ஆசிரியரான அரிசன்
ஹாபோதுவின் ‘இர ஹந்த நெகி ரட்ட’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து
கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
அங்கு உரையாற்றியுள்ள அவர் மேலும்
தெரிவித்துள்ள தகவலில் விஜயன் குவேனி காலத்திற்கு முன்பே இந் நாட்டில்
மக்கள் வாழ்ந்து வந்தமை அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து போன்ற பிரதேசங்களில் இதற்கான சான்றுகள் கிடைக்கப்
பெற்றுள்ளது.சிங்களவர்களின் மூதாதையர்கள் ஆரியர்கள் இல்லை. இதனை வரலாற்று
ஆய்வாளர்கள் விரைவில் நிரூபிப்பார்கள்.
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு
பிடிப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் விமானம் போன்ற போக்குவரத்துச்
சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இராமயணத்தில் புஷ்பக விமானம் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
