இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களில் 88 வீதமானோர் கையடக்கத் தொலைபேசி பாவனையில் ஈடுபடுவதாக புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்களி்ல் 62 வீதமானோர் அவற்றை தொடர்ந்தும் பயன்படுத்துவதில்லை என்பது இதிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
ஆசியாவில் நாளாந்தம் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் ஆறு நாடுகளின் தகவல் தொழிநுட்ப பயன்பாடு தொடர்பில் LEARN ASIA நிறுவனம் ஆராய்ந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட் நாடுகள் இவற்றில் அடங்குகின்றன.
இதேவேளை குறைந்த வருமானம் பெறுபவர்கள் தகவல் பரிமாற்றத்திற்காக கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுல் 49 வீதமானவர்கள் சொந்தமாகவே கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருக்கின்றமையும் தெரியவந்துள்ளது.
