புதிதாக தெரிவான நிர்வாக சபையின் உப தலைவர் கே.மதிவாணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த வருட இறுதியில் இந்த போட்டிகள் நடத்தபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 'ஸ்ரீ லங்கா கிரிக்கெட்' எதிர்நோக்கிய நிதி நெருக்கடி காரணமாக அந்த போட்டிகள் பிற்போடப்பட்டிருந்தன..
எப்படியிருப்பினும், இந்த விடயம் தொடர்பாக உபதலைவர் மதிவாணனுடன் தொடர்பு கொண்ட போது, அது குறித்து இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்தார்.
நாளை மறுதினம் இதுகுறித்து ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் உயர் மட்ட கூடி இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்..
