பொலீசுக்கே சாராயம் சப்லை - வசமாக மாட்டினர் ஐவர்


news
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் சிவில் உடையில் நின்ற பொலிசாருக்கும் மதுபானத்தை வழங்கினர்.


நேற்று முன்தினம் இவ்வாறு விற்பனையில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். மதுபானத்தை வழங்கிய ஐவரையும் கையும் மெய்யுமாக கைது செய்தனர் பொலிசார். அத்துடன் அவர்கள் வசமிருந்த 120 லீற்றர் மதுபானத்தை பொலிஸார் மீட்டதோடு யாழ். நீதிமன்றில் நேற்று அவர்களை முன்னிலை செய்தனர். அவர்களுக்கு 41 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையின் அரைவாசித் தொகையை பொலி சாருக்கு வெகுமதியாக வழங்குமாறும் நீதிவான் மா.கணேசராஜா உத்தரவிட்டார்.

யாழ்.ஸ்ரான்லிவீதி, குருநகர், கொட்டடி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த ஐவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் விற்பனையில் ஈடுபட்ட போதும், மற்றைய இருவர் விற்பனைக்கு தயாராக தம் வசம் வைத்திருந்த போதும் கைது செய்யப்பட்டனர் .இவர்களுள் குரு நகரை சேர்ந்த ஒருவர் 88.5 லீற்றர் மது பானம் வைத்து இருந்தமை குறிப்பிடதக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now