ரஸ்ய பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை லங்கா ஹொஸ்பிடல்

ரஸ்ய பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை லங்கா ஹொஸ்பிடல்

அண்மையில் தங்காலை பிரதேச ஹோட்டல் ஒன்றில் தாக்குதலுக்குஇலக்காகி உயிரிழந்த பிரித்தானிய பிரஜை குராம் சாக்கீயின், ரஸ்ய தோழி அலெக்ஸான்ட்ரோவ்னா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என லங்கா ஹொஸ்பிட்டல் தனியார் மருத்துவமனைஅறிவித்துள்ளது.
 
அலெக்ஸான்ட்ரோவ்னா ரஸ்ய தூதரகத்தில் வாக்கு மூலம் அளித்த போதுபாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து எவ்விதமுறைப்பாட்டையும் செய்யவில்லை என லங்காஹொஸ்பிட்டல் மருத்துவ மனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்கீ பீரிஸ்தெரிவித்துள்ளார்.
 
அலெக்ஸான்ட்ரோவ்னா, பாலியல் ரீதியான வன்முறைக்குஉட்படுத்தப்பட்டாரா என்பது குறித்து மருத்துவ மனையில் பல்வேறு பரிசோதனைகள்நடத்தப்பட்டதாகவும், பரிசோதனைகளின் மூலம் பாலியல் வல்லுறவு இடம்பெறவில்லை என்பதுநிரூபணமாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அல்ட்ரா சவுன்ட் முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தமது அறிவுக்கு எட்டிய வகையில் பாலியல் வன்முறை இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அலெக்ஸான்ட்ரோவ்னா குடும்ப உறுப்பினர்கள் ரஸ்யாவின் மொஸ்கொவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now