இலங்கையில் மருந்துகள்
விஷமாவதால் ஏற்படும் உயிரிழப்புக்களில் பெரும்பாலானவை அளவுக்கு அதிகமான
பரசிற்றமோல் பாவனையால் ஏற்படுவதாக மருந்துகள் அதிகார சபையின் பணிப்பாளர்
ஹேமந்த பெனரகம தெரிவித்துள்ளார்.
வலி நிவாரணி எனப் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் சந்தைகளில்
மருத்துவர்களின் சிபாரிசு இன்றி பரசிற்றமோலைப் பெறக் கூடியதாக உள்ளமையே
இதற்கு பிரதான காரணம் எனவும் அவர் கூறினார்.
மருத்துவரின் சிபார்சுக்கு அமைய 6
மணித்தியாலயங்களுக்கு ஒரு தடவை மற்றும் நபரொருவரின் நிறைக்கு அமைய இரண்டு
எனவும் பிரமாணம் விதிக்கப்பட்டாலும் அநேகமானோர் தமது எண்ணப்படி இதைப்
பயன்படுத்துகின்றமையே பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாவும்
பணிப்பாளர் மேலும் கூறினார்.
1984 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க மருந்துகள்
சட்ட விதிகளுக்கு அமைய பரசிற்றமோல் மற்றும் விற்றமின் "ஏ' யைக் கொண்டுள்ள
மருந்துகளை மக்களுக்கு விநியோகிக்கும் போது இந்த மருந்தை அளவு
பரிமாணத்துக்கு அதிகமாகப் பயன்படுத்துவது ஆபத்தானது எனக் குறிப்பிடுவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு
பரசிற்றமோல் மருந்தைப் பெறும் போது, மருத்துவ சிபார்சுக்கு அமைய அதைப் பயன்
படுத்துமாறு மருத்துவர் பெனரகம தெளிவுபடுத்தியுள்ளார்.
|
அளவுக்கதிகமான பரசிற்றமோல் மரணத்தை விளைவிக்கும்
Labels:
மருத்துவம்
