தற்போது மினாவிலுள்ள வசதிகளை கருத்தில் கொள்ளும்போது இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என சவூதி அமைச்சர் கூறினார்.
ஜித்தாவிலுள்ள ஹஜ் அமைச்சர் பண்டார் ஹஜ்ஜரின் அலுவலகத்தில் நேற்று
புதன்கிழமை சந்தித்தபோதே அமைச்சர பௌசி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
சென்ற வருடம் ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டா 2800 பேராக இருந்தது. இது இறுதி
நேரத்தில் 3800 ஆக அதிகரிக்கப்பட்டபோது இந்த அவசர நிலைமையை பயன்படுத்தி
ஹஜ் யாத்திரை ஒழுங்கு செய்யும் முகவர்கள் கூடிய இலாபமீட்டினார் என அமைச்சர்
பௌஸி விளக்கினார்.
இம்முறை ஒரே தடவையில் கோட்டா வழங்கப்படுமென சவூதி அமைச்சர் கூறியதாக அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.
2010 இல் வழங்கப்பட்ட கோட்டாவான 5800 பேரை இம்முறையும் வழங்கும்படி கேட்டு கொண்டதாக அமைச்சர் பௌஸி கூறினார்.
2010 இல் வழங்கப்பட்ட கோட்டாவான 5800 பேரை இம்முறையும் வழங்கும்படி கேட்டு கொண்டதாக அமைச்சர் பௌஸி கூறினார்.
இந்த சந்திப்பில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை கௌன்ஸல் ஆதம்பாவா உதுமாலெப்பையும் கலந்துகொண்டார்.
