டெங்கு உள்ளிட்ட தொற்றுக்களை
ஏற்படுத்தும் நுளம்பு கடிக்கு எதிராக உடலில் பூசுவதற்கென புதிய தோல்
பூச்சு ஒன்றை தயாரிப்பதற்கு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் விசேட
சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்தி இந்த
தோல் பூச்சியை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு
நிறுவனத்தின் பணிப்பாளர் அணில் சமரசிங்க குறிப்பிட்டார்.
நாளாந்தம் அதிகரித்துச் செல்லும்
டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை
முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

