சேவக்கின் ஓய்வு என்பது எனது முடிவல்ல: டோனி!


முத்தரப்பு கிரிக்கட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சேவக் பங்குபெறவில்லை.
இப்போட்டியில் இருந்து இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இது அணியின் முடிவே தவிர எனது முடிவல்ல என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
இதுகுறித்து டோனி கூறியதாவது, முத்தரப்பு தொடர் என்பது நீண்ட தொடராகும். இத்தொடரை வெல்வதற்கு இந்திய அணி கடும் முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் சேவக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது அணியின் முடிவே.
காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படாமல் உள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், தற்போது உடல்நலம் தேறி உள்ளதால் எதிர்வரும் போட்டிகளில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படலாம் என்றார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now