இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும்
இந்தியாவின் உதவிகள் அவசியம் என, இந்திய ஜனதா கட்சியின் தலைவர்
சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
பி.டி.ஐ செய்தி நிலையத்துக்கு வழங்கிய
செவ்வியில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை தமிழர்களுக்கு
உடனடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் தாம் உறுதியாக
இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு
முன்வைக்கப்படும் பட்சத்திலேயே, நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும்
என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள்
தோற்கடிக்கப்பட்டமை, தமிழின மக்கள் தோற்கடிக்கப்பட்டதாக அமையாது. இதனைத்
தமிழ் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி
தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஹம்பாத்தொட்டை துறைமுக
வேலைத்திட்டம் தொடர்பில், இலங்கை முதலில் இந்தியாவையே நாடியது எனினும்,
அதில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.
இதனைத் தொடர்ந்தே இலங்கை சீனாவை
நாடியதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். இதேவேளை, இலங்கையின் மலையக்பகுதிகளில்
உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலன் தொடர்பிலும், இந்திய மத்திய
அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.

