இதுகுறித்து
அக்தர் கூறியதாவது, ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இரு அணிகளும் விளையாடாமல்
உள்ளன. இது விரக்தி அளிக்கிறது. இருநாட்டு ரசிகர்களும் இதனால் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் அணி வலுவாக உள்ளதால் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி தயங்குகிறது என கிரிக்கட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரப் கூறியுள்ளார்.
இந்தக்
கருத்து சிறிது அதிகப் பிரசங்கித்தனமானது தான். கிரிக்கட் வாரியத் தலைவர்
என்ற பொறுப்பில் இருப்பதால் அவர் வார்த்தைகளை எச்சரிக்கையுடன் கையாள
வேண்டும். இருப்பினும் இப்போதைய பாகிஸ்தான் அணியால் எந்த அணியையும் வெல்ல
முடியும் என்றார்.
மேலும்
கிரிக்கட் ஊழல் புகாரில் சிக்கி 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள
வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமீருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட
வேண்டும்.
அவர்
வயதில் மிகவும் இளையவர் என்பதால் அவரை ஊழல் செய்வதில் சிக்க
வைத்துவிட்டனர். எல்லோருமே தவறு இழைக்கிறோம், அவர் தனது தவறை உணர்ந்து
கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.
விளையாட்டில்
ஊழலைக் களைய அவரை ஒரு முன்மாதிரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத் தலைவரும் ஆமீருக்கு ஆதரவாக கருத்து
தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றார்.

