சேவாக் கருத்திற்கு கவாஸ்கர் எதிர்ப்பு!


2015 உலகக் கோப்பை மற்றும் இளம் வீரர்கள் வாய்ப்பு ஆகிய காரணத்தினால் துவக்க வீரர்களை சுழற்சி முறையில் விளையாட வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்ததாக சேவாக் கூறிய கருத்திற்கு கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"இருக்கும் வீரர்களிலேயே சிறந்த வீரர்களைக் களம் இறக்கி வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டு விளையாட வேண்டும்.
சுழற்சி முறை என்ற கருத்தே வீரர்கள் உடற் தகுதியுடன் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. 8 ஆட்டங்கள் தொடர்ந்து விளையாடினால் கூட சிறந்த வீரர்களே விளையாட வேண்டும்.
சுழற்சி முறையில் வீரர்களை களம் இறக்குகிறீர்கள் என்றால், உங்களது கவலை எல்லாம் வெற்றி குறித்து அல்லாமல் வீரர்களின் ஓய்வு குறித்தே என்பதைக் காட்டுகிறது.
உலகக் கோப்பைக்கு வீரர்களைத் தயார் செய்கிறோம் என்கிற வாதமும் ஏற்புடையதாக இல்லை. அப்படியெனில் மூத்த வீரர்களைத் திருப்பி அனுப்புங்கள். அவர்களைத் தேர்வு செய்தால் களம் இறக்க வேண்டும்.
சச்சின், சேவாக், கம்பீர் மூவரையும் மாற்றி மாற்றி விளையாட வைக்க வேண்டும் என்ற கருத்தும் சரியல்ல. சேவாக், சச்சின், கம்பீர் என்ற வரிசையில் களம் இறங்கித்தான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அப்படியிருக்கையில் இந்த வரிசையை ஏன் மாற்ற வேண்டும்?
பெர்த்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 3 வேகப் பந்துவீச்சாளர்களுடன் அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் விளையாட வேண்டும். முதல் ஆட்டத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் இருவரும் சரியாகப் பந்துவீசவில்லை. எனினும், மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்றார் கவாஸ்கர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now