இன்று (14) புதன்கிழமை பிரித்தானிய நேரப்படி இரவு 10.55 க்கு சனல் 4 தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பவுள்ளது.
வழமைபோல இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதான காணொளியும் வெளியிடப்படலாம் என அறியக்கிடைக்கிறது.
இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது.
இதேவேளை, சனல் 4 வின் காணொளியை மறுத்துள்ள இலங்கை இராணுவம் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணம் தொடர்பில் விசேட காணொளி ஒன்றையும் வெளியிடவுள்ளது.

