2002 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி ஒருவரைத் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் தெரணியகல பொலிஸார், சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், இதற்கு முன்னரும் ஆட்கொலை சம்பவம் ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவராவர்.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், மேனகா விஜேசுந்தர கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இடமாற்றம் பெற்று கடமையாற்றி வருகின்றார்.
அது முதல் பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய 16 குற்றவாளிகளுக்கு அவர் தண்டனைகளை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

