அடுத்துவரும்
ஒரு வருட காலப் பகுதிக்குள் எதுவித பஸ் கட்டண உயர்வும் மேற்கொள்ளப்படாது
என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்று கையில். எரிபொருள் விலை உயர்வைத்
தொடர்ந்து பஸ் கட்டணமும் இருபது சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்துவரும் ஒரு வருட காலத்திற்கு எதுவித கட்டண உயர்வையும்
மேற்கொள்ள கோரமாட்டோம் என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுதி
யளித்துள்ளனர்.
அந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்பவே இக்கட்டண உயர்வுக்கு இடமளிக்கப்பட்டது.
ஆனால் எதிர்வரும் ஜுலை மாதம் வருடாந்த பஸ் கட்டண உயர்வு இடம்பெறாது.
அதற்கும் சேர்த்தே இப்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

