பீஜிங், டிச. 30-
சீனாவில் ஹூனான் மாநிலம் சாங்ஷா நகரில் உள்ள அரசு அலுவலத்தில் குண்டு வெடித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இந்த நாசவேலையில், 4 பேர் உயிர் இழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக லியூ-ஜூகெங் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக, அவரது நண்பர்கள் லி-ஜியோ, லியூ-ஜியான் ஆகியோரும் கைதானார்கள்.
அவர்கள் மீதான வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. லியூ-ஜூகெங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 2 பேருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.