மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத கழிவுகள் சேர்ந்த உணவுப் பொருட்களை
விற்பனை செய்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட உணவக உரிமையாளருக்கு
நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் ஏ.என்.எம்.பி.அமரசிங்க 7ஆயிரத்து 500 ரூபா
அபராதம் விதித்தார்.நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் இரவு நேர உணவகம் ஒன்றை நடத்தி வந்த உரிமையாளர் ஒருவருக்கே இந்த அபராத தொகை விதிக்கப்பட்டது.
நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஈ.ஏ.மோமரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அபராதம் விதிக்கப்பட்டுள்ள உணவகத்தில் தயாரிக்கப்பட்ட கொத்து ரொட்டியில் கழிவுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் காலாவதியான மற்றும் நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டு கடை உரிமையாளருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.

