
தமது கல்வி வலயத்திலுள்ள 24 பாடசாலைகளின் கணணிகள் மற்றும் கணணிப் பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக கொலென்ன வலய கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், கொலென்ன, அம்பிலிப்பிட்டி மற்றும் பனாமுறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு தகவல் தொழிநுட்பத்தை கற்பிப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவிய போது குறித்த பொலிஸ் நிலையங்களில் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.