மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்த மெல்போர்ன் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே கை கொடுத்ததால், 2 அணிகளிலும் எந்த வீரரும் சதம் அடிக்கவில்லை. இதன் காரணமாகவே சதம் வரை நெருங்கி வந்தபோதிலும சச்சினால் சதமடிக்க முடியாமல் போய் விட்டது.
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றது. இதில் முதல் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது.
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதற்கேற்ப மெல்போர்ன் மைதானமும் வேகப் பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருந்தது. அதேசமயம் ஸ்பின் பவுலிங்கும் கூட எடுபட்டுள்ளது. நமது வீரர் அஸ்வின் இந்த மைதானத்தில் 4 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இரு அணிகளிலுமே பேட்டிங்குக்கு இந்த மைதானம் பெரியஅளவில் சாதகமாக இல்லை. இரு அணிகளிலுமே யாரும் சதம் போடவில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் ஹஸ்ஸி 89 ரன்கள் எடுத்தார். சச்சின் 73 ரன்கள் எடுத்தார். 2வது இன்னிங்ஸில் அவர் 32 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது.
பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பாக ஒத்துழைத்த மெல்போர்ன் ஆடுகளத்தில், முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்கள் சரிந்தன. 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் மீதமுள்ள 4 விக்கெட்களும், இந்திய அணியின் 3 விக்கெட்களும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்கள் விழுந்தன. 3வது நாளில் இந்திய அணியின் முதல் இன்னிங்க்சின் மீதம் இருந்த 7 விககெட்களும், ஆஸ்திரேலிய அணியின் 2வது இன்னிங்க்சின் 8 விக்கெட்களும் சரிந்தன.
4வது நாளான இன்று காலையில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேரும் விரைவாக களத்தில் இருந்து வெளியேறினர். அதன்பிறகு 2வது இன்னிங்க்சை துவக்கிய இந்தியா, 10 விக்கெட்களையும் இழந்தது.
மொத்தத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம், மெல்போர்ன் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது. மேலும் சுழல்பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட்கள் கிடைத்து, ரன்களும் குறைந்த அளவிலேயே கொடுத்து உள்ளனர். ஆக பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே இது உதவியுள்ளது. பேட்டிங்கை கைவிட்டு விட்டது.
பேட்ஸ்மேன்களுக்கு ஆப்பு வைத்த மெல்போர்ன் மைதானம்- ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை
Labels:
கிரிக்கட்,
விளையாட்டு