உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சரியான மாவட்ட நிலைகள்
வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர்
தெரிவித்துள்ளார்.
இம்முறை வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளில் மாவட்ட தரவரிசையில் ஏற்பட்ட
பிரச்சினைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள
குளறுபடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கடந்த
11ஆம் திகதி ஜனாதிபதியிடம் தமது அறிக்கையை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.