![]() |
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
இவர் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலயத்தை வந்தடைந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை வந்தடைந்த அப்துல் கலாம், ஜனாதிபதி மஹிந்த ராஜயக்ஷ உட்பட நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய நிலையில், அப்துல் கலாம் இலங்கை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




