குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள் தயாரிக்கிறது. அமேசான்.காம்
மற்றும் ஆப்பிள் நிறுவன ங்கள் மிகச்சிறிய கணினியை சந்தையில்
அறிமுகப்படுத்தியுள்ளன. இத்தயாரிப்புகளுக்கு சவால் விடும் விதமாக ஆசிய
நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கூகுள் நிறுவனமும் மிகச்சிறிய கணினியை
தயாரிக்க இருக்க இருக்கிறது.

டிஜிட்டிமஸ் மற்றும் வால்ஸ்டீரீட்
பத்திரிக்கையில் தெரிவித்துள்ள தகவலின் படி, ஆன்ட்ராய்ட் மென்பொருள் நிறு
வனம் சாம்சங் மற்றும் ஆசுச்டேக் நிறுவனங்களுடன் இணைந்து ஐ-பேடு மற்றும்
கிண்ட்லே சாதனங்களுக்கு போட்டியாக இச்சிறிய கணினி உருவாக்கப்பட இருக்கிறது.
இக்கணினி 199 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10000 ரூபாய்) விலையில் வரும் மே மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று அச்செய்தியில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.