தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தாய்
ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்தில்
குழந்தையும் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
வத்தனகடபொல, ஜய மாவத்த எனும் இடத்திலேயே இக்கோரச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது. 41 வயதான தாய் தனது குழந்தைக்கு மூளை வளர்ச்சியில்
பாதிப்புள்ளதனை அறிந்து கொண்டதன் பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்தே குறித்த தாய்
குழந்தையினதும் தனதும் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் குழந் தையுடன்
கிணற்றுக்குள் பாய்ந்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து
தெரியவந்துள்ளதென பொலிஸ் பேச்சாளர் கூறினார். பாணந்துறை வடக்கு பொலிஸார்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.