இந்து சமுத்திரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி: சம்பிக்க

இந்து சமுத்திர பிராந்தியத்தையும் தனது செல்வாக்கு மண்டலமாக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இலங்கை மீது கொண்டுவரும் தீர்மானம் என மின்வலு அமைச்சரும் ஜாதிக்க ஹெல உறுமயவின் செயலாளருமாக சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த முயற்சி குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 21ஆம் நுற்றாண்டின் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை அமெரிக்கா நன்றாக உணர்ந்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை எதுவும் இல்லை. இலங்கைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும் சரி, கொண்டுவராவிட்டாலும் சரி, நாம் வென்றாலும் சரி, வெல்லாவிட்டாலும் சரி, அவர்களால் எம்மீது அழுத்தம் பிரயோகிக்க முடியும். இதையே அமெரிக்கா ஈரானிலும் செய்துள்ளது என அவர் கூறினார்.

இவ்வாறாக வெளியிலிருந்து வரும் பயமுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நாம் பொருளாதார ரிதியில் பலம்பெற வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் குடித்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் நடத்திய கணக்கெடுப்பு பற்றியும் கூறினார்.

இப்பகுதிகளில் சிங்களவர், முஸ்லிம்களின் சனத்தொகை அதிதாழ் மட்டத்தில் உள்ளது. இவர்கள் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதுகூட இவர்கள் அங்கு மீள்குடியேற்றத்துக்காக செல்லும்போது பல கஷ்டங்களை எதிர்க்கொள்கின்றனர் என அமைச்சர் சம்பிக்க குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு, யுத்தத்தின்போது 7934பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களும் அடங்குகின்றனர். இந்த மரணங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு. பாதுகாப்பு படைகள் பொறுப்பல்ல.

ஐக்கிய தேசிய கட்சி, பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற அறிக்கைகளை உள்நாட்டு சக்திகள் வெளியிடும் போது, மேற்கத்தேய நாடுகளுக்கு இலங்கை மீது தீர்மானம் இயற்றுவது இலகுவாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் பிரபல தலைவர்கள் எல்லோரையும் தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் கூறினார். 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now