இரத்மலானையிலுள்ள வீடொன்றிலிருந்து
பல்வேறு வகையான முதலைகள், பாம்புகளை வன ஜீவி பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று
கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் காணப்பட்ட இந்த விலங்குகள் பாரிய சாக்கு
ஒன்றிலும் 9 போத்தல்களிலும் வைக்கப்பட்டிருந்தன.
இந்த விலங்குகள் சாக்கிலும்
போத்தல்களிலும் அடைக்கப்பட்டு, இறக்கவிடப்பட்டுள்ளதாக வனஜீவி பாதுகாப்பு
அதிகாரி என்.ஜி. விமலரத்ன கூறினார். பாம்புமுட்டைகளின் கோதுகளும் பலகைப்
பெட்டியொன்றில் அவற்றில் காணப்பட்டதாகவும் இது இவ்விலங்குகள்
வளர்க்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது
எனவும் அவர் கூறினார்.
அவ்வீட்டை முற்றுகையிட்டபோது 28 வயதான
சந்தேக நபர் ஒருவர் அங்கு இருக்கவில்லை. அவர் யால வனவிலங்கு
சரணாலயத்துக்கு சென்றிருந்தாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.