இந்தியாவின்
அதி உயர் சிவிலியன் விருதான “பாரத ரத்னா” விருதை எல்.ரி.ரி.ஈ.யை துவம்சம்
செய்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டுமென இந்திய ஜனதா
கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கேட்டுள்ளார்.
எல்.ரி.ரி.ஈ.
பயங்கரவாதிகளை இலங்கை மண்ணில் அழித்து ஒழித்த இந்த சாதனை வீரர் மஹிந்த
ராஜபக்ஷ, இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த
எல்.ரி.ரி.ஈ.யை துவம்சம் செய்ததனால், அவருக்கு இந்திய அரசாங்கமும்,
மக்களும் நன்றி செலுத்தும் முகமாக பாரத் ரத்னா வழங்க வேண்டுமென்று
கூறியுள்ளார்.
எல்.ரி.ரி.ஈ.
அழிக்கப்படாமல் இருந்தால் அவ்வியக்கம் தனது இராணுவ, கடற்படைகளை
வலுப்படுத்தி இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கு
காரணமாக இருந்திருக்குமென்றும் சுப்ரமணியம் சுவாமி சுட்டிக்காட்டுகிறார்.
கதிர்காமத்திற்கு
சென்று முருகப்பெருமானை தரிசித்த பின்னர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி
இலங்கையிலுள்ள வெளிநாட்டு செய்தி நிருபர்களையும் சந்தித்து உரையாடினார்.
எல்.ரி.ரி.ஈ. தன்னுடைய பணப்பலத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கே பெரும்
ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்பு அன்று தோன்றியிருந்தது.
இத்தகைய
சூழ்நிலையில் எல்.ரி.ரி.ஈ.யை அழித்து இந்தியாவுக்கு உதவியளித்த ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவை பாரத் ரத்னா விருதை வழங்கி கெளரவிப்பது இந்தியாவின்
தலையாய கடமையென்று சொன்னார்.
திரு.
சுப்ரமணியம் சுவாமி 1991ம் ஆண்டில் பிரதம மந்திரி பதவியில் இருந்த
சந்திரசேகர் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இந்திய மத்திய
அரசாங்கம் தமிழ்நாடு கொண்டு வரும் அழுத்தங்களை கொண்டுவராமல் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனவும் அவர் சொன்னார்.
இன்று
இலங்கை வாழ் தமிழர்கள் அமைதியாகவும் அச்சுறுத்தல் இன்றி மகிழ்ச்சியோடு
வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அவர்கள் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மீது மிகவும் நம்பிக் கை வைத்திருக்கிறார்கள்.
எனவே,
ஜனாதிபதி கொண்டு வரும் சமாதான முயற்சிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் தங்கள்
பூரண ஒத்துழைப்பினை வழங்கு வார்கள் என்று தமக்கு நம்பிக்கை இருக்கிறதென்று
டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மேலும் தெரிவித்தார்.