பேஸ்புக் கணக்கு முடக்கம் மற்றும் போலியான கணக்குகள் தொடர்பில் இதுவரை 200
க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி
அவசரப்பிரிவு குழுவின்(CERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹண
பல்லியகுருகே வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
மின்னஞ்சல் மற்றும் இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் சுமார் பத்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முகப்புத்தகம் ஹெக் செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த வருடம் மாத்திரம் 1500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் நாளாந்தம் முறைப்பாடுகள் அதிகரித்த நிலையிலேயே இருக்கின்றது.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.