தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணித்து உளவு பார்ப்பதில் அமெரிக்கா,
பிரேசில் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளதாக
Google Transparency Report அறிக்கை கூறுகிறது. மின்னஞ்சல் உளவு
பார்ப்பதில் தொடராக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. google
பயனீட்டாளர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ள தங்களை அணுகுவதில் அமெரிக்கா, பிரேசில் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளதாக Google Transparency Report அறிக்கை தெரிவிக்கிறது.
அதேவேளை 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு
தகவலை நீக்க கோரி இலங்கை அரசு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது என்றும்
அந்த அறிக்கை குறிபிட்டுள்ளது. தகவல் தொடர்பில் பெரும்பாலும் வெளிப்படையான
தன்மையை உறுதிச்செய்யும் முயற்சியின் வருடம் தோறும் கூகிள் Transparency
அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த அறிக்கையிலேயே இந்த தகவல்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இணயதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை
நீக்குவதற்கு கோரிக்கை விடுப்பதில் . சீனா ,பிரேசில், தென் கொரியா,
ஜெர்மனி, லிபியா இந்தியா ஆகியன நாடுகள் முன்னணியில் உள்ளது என்று அந்த
அறிக்கை கூறுகிறது .
2010-ஆம் ஆண்டு மட்டும் இந்திய அரசு 3
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களின் விபரங்களை கூகிளிடமிருந்து
ரகசியமாக பெற்றுள்ளது நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களின் கருத்துக்களை
அழிக்கவும் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம்
வரை கூகிள் சேவைகளில் 68 கருத்துக்களை நீக்க இந்தியா கோரிக்கை
விடுத்துள்ளது . ஆனால் அவற்றில் 51 சதவீதம் மட்டுமே அங்கீகரித்ததாக கூகிள்
அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய கேரள மாநிலத்தில் முஸ்லிம்
பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் மின்னஞ்சல்
முகவரிகள் இந்திய போலீசாரால் ரகசியமாக கண்காணிக்கப்படும் தகவல்கள்
வெளியானமை குறிப்பிடத்தக்கது அமெரிக்கா 2010ஆம் ஆண்டு 8888 மின்னஞ்சல்
பயனீட்டாளர்களின் விபரங்களை கூகிளிடம் கோரியுள்ளது. பிரேசில் 4239
பயனீட்டாளர்களின் மின்னஞ்சல் விபரங்களையும், இந்தியா 3129 பயனீட்டாளர்களின்
மின்னஞ்சல் விபரங்களையும் கூகிளிடம் கேட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.