பகவத்
கீதைக்கு தடை விதிக்க முடியாது என, ரஷ்ய கோர்ட் அளித்த தீர்ப்பை
எதிர்த்து, சைபீரிய அரசு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.
ரஷ்யாவில், ஆர்த்தோடாக்ஸ் சர்ச் ஒன்று, பகவத் கீதைக்கு, "இஸ்கான்' நிறுவனர்
பக்தி வேதாந்த பிரபுபாதா எழுதிய உரையான, "பகவத் கீதை - உள்ளது உள்ளபடி'
என்ற பிரசுரம், பயங்கரவாதத்தை தூண்டுவதாக இருப்பதால், அதற்கு தடை விதிக்க
வேண்டும் எனக் கோரி, டோம்ஸ்க் நகர் கோர்ட்டில் ஒரு மனுவை, கடந்த ஆறு
மாதங்களுக்கு முன் தாக்கல் செய்தது.
விசாரணை
முடிவில், பிரபுபாதாவின் பகவத் கீதை உரைக்கு தடை விதிக்க முடியாது என,
டோம்ஸ்க் கோர்ட், கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பளித்தது. நீதிபதி கலினா
புடென்கோ தனது தீர்ப்பில், பிரபுபாதாவின் பகவத் கீதை பயங்கரவாதத்தை
தூண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்தார். உலகம்
முழுவதிலும் உள்ள "இஸ்கான்' அமைப்பினரும், இந்துக்களும் இத்தீர்ப்பை
வரவேற்றனர்.
மாஸ்கோவில்
உள்ள இஸ்கான் அமைப்பின் துறவி பிரியாதாஸ் குறிப்பிடுகையில், "டோம்ஸ்க்
கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சைபீரிய அரசு வழக்கறிஞர்கள்
ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்' என்றார்.