ஈரான்
மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பிரயோகித்துவரும் அழுத்தங்கள்
இலங்கையை பாதிக்கக் கூடிய அபயாம் காணப்படுவதாக சர்வதேச ஊடகமொன்று
தகவல்வெளியிட்டுள்ளது.
எண்ணெய் இறக்குமதியில் இலங்கை, ஈரானை பெருவாரியாகநம்பியிருப்பதனால் இந்த நெருக்கடி நிலை ஏற்படக் கூடுமென சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத்தடை கடுமையாக்கினால், இலங்கையினால் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது.
இலங்கையின் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்ஒன்றுக்கு 50,000 பெரல் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுகின்றது.
ஈரானின் மசகு எண்ணெயை நம்பியே சப்புகஸ்கந்த சுத்திகரிப்புநிலையம் இயங்கி வருகின்றது.
உடனடியாக வேறு ஓரு நாட்டிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதென்பதுநடைமுறைச்சாத்திமற்றது.
ஏனெனில் ஈரானிய மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் வகையில்சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகளவு சல்பர் செறிந்த, கனமான ஈரானின் மசகு எண்ணெயைசுத்திகரிக்கும் வகையில் இந்த சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து
விதமான மசகு எண்ணெய் வகைகளையும் சப்புகஸ்கந்தவில்சுத்திகரிக்க முடியாது என
பெற்றோலிய வளஅமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கை அமெரிக்காவுடன் பாரியளவில் வர்த்தக உறவுகளைப் பேணிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிலிருந்து
எண்ணெய் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டால், அமெரிக்கா இலங்கைக்கு சில
சலுகைகளை வழங்கக் கூடும் எனதெரிவிக்கப்படுகிறது.
எனினும்,
அரசாங்கத்தின் மீது அமெரிக்கா மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்களை
சுமத்தியதனால், ஈரான் பொருளாதாரத்தடையை எதிர்க்கும் சீனா,ரஸ்யாவுடன் இலங்கை
நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வறாhன ஓர் பின்னணியில் அமெரிக்காவின் சலுகைகளை இலங்கையினால்பெற்றுக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.
இந்த விடயம் குறித்து அரசாங்கம் அவசரமான தீர்மானங்களை எடுக்காது எனமத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதேNளை, ஈரான் எண்ணெய் இறக்குமதி தடை குறித்து வெளிவிவகாரஅமைச்சு எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் மாற்று வழிகளைத் தேடிக் கொள்வதுஅவ்வளவு சுலபமான காரியமல்ல.