பௌத்த
பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனை தடுத்து நிறுத்தஅரசியல்வாதிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டுமென கண்டி அஸ்கிரி பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கிததேரர்
தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனை தம்மால் தடுக்க முடியாது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனை அரசியல்வாதிகள்ஊக்கப்படுத்தக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய
தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச,கண்டி அஸ்கிரி
பீடாதியிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் நோக்கில் விஹாரைக்கு சென்றிருந்தபோது
அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு
சக்திகளின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு நாட்டின் அனைத்துதரப்பினரும்
இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகளின் வழிகாட்டல்களுக்கும் அமைவாக நாம்நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலில் ஈடுபடும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடும்என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்புகள்,
அழுத்தங்கள் விமர்சனங்களை முறியடித்து அர்ப்பணிப்புடன்முன்னேற வேண்டியது
அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய
நபர்களை அவதூறுக்கு உட்படுத்தாது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவேண்டியது
அவசியமானது என அஸ்கிரி பீடாதி, சஜித் பிரேமதாசவிடம் குறிப்பிட்டுள்ளார்.