அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி - வீடியோ இணைப்பு

கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ட்விங்கிள் திவிவேதி. 13 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்த சிறுமி அழ ஆரம்பித்தால், கண்ணில் கண்ணீர் வருவதற்கு பதில் ரத்தம் வடிகிறது. அதுமட்டு மல்லாமல் கை, கால், தலை என உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து ரத்தம் வடிகிறது.

இந்த பிரச்னையால் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாமல் உள்ளார். ஏற்கனவே படித்து வந்த பள்ளி நிர்வாகம் வெளியில் அனுப்பி விட்ட நிலையில் வேறு பள்ளியிலும் சேர்க்க மறுக்கின்றனர்.

இதுவரை இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், ரத்தம் உறையாததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ட்விங்கிளின் உடல்நிலையை பரிசோதித்தேன். உடலில் எந்த இடத்திலும் காயம் எதுவும் இல்லாத நிலையில் அழும்போது, ரத்தம் பல இடங்களிலிருந்து வருகிறது.


இதுவரை இப்படி ஒரு பிரச்னையை பார்த்ததே இல்லை என இங்கிலாந்தின் பிரபல மருத்துவர் ஜார்ஜ் புக்கனன் தெரிவித்தார். 11ம் வயதில் முதன் முதலாக அழும் போது இப்படி ரத்தம் வந்தது. ஆனாலும் ரத்தம் வருவதால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிது நேரத்துக்கு தலை வலியும் உடல் சோர்வாகவும் உள்ளது.

மேலும், துணி முழுவதும் ரத்தக் கறை படிந்து அசுத்தமாகி விடுகிறது, மற்றவர்கள் என்னை வெறுக்கிறார்கள். எனவே, இப்போது அழுவதை நிறுத்திக் கொண்டேன் என ட்விங்கிள் தெரிவித்துள்ளார். எனது மகளின் பிரச்னை தீர, கோயில், சர்ச், தர்கா என அனைத்துக்கும் சென்று வந்தேன்.

பலன் கிடைக்கவில்லை. சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான வசதியும் எங்களிடம் இல்லை என ட்விங்கிளின் தாய் நந்தினி தெரிவித்துள்ளார். இந்த சிறுமி, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் மூலம் நேரடியாக சிகிச்சை உதவி கேட்க உள்ளார்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now